மீசை தாடி வேகமாக வளர இதுதான் ஒரே வழி...!!!!
மீசை தாடி வேகமாக வளர இதுதான் ஒரே வழி
தாடி வைத்திருப்பது ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. திரைப்படங்களில் நடிகர்கள் வைத்திருப்பதை போல நாமும் தாடியை வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள்.முந்தைய காலத்தில் தாடி வைத்திருந்தால் காதல் தோல்வி என நினைப்பார்கள். ஆனால் இப்போது தாடி வைத்திருப்பது பேஷன் ஆகி விட்டது.
ஆண்கள் தாடியை அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு புது புது டிசைன் இல் மாற்றி கொள்வார்கள். குறிப்பாக இப்போது உள்ள இளைஞர்கள் தாடி வைத்திருப்பதை அதிகமாக விரும்புகின்றனர். அப்படிப்பட்ட தாடி அனைவருக்கும் வருவதில்லை.இதற்க்கு காரணம் ஆண்களின் ஜீன் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தான் என உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர்.அதற்க்காக ஆண்கள் பலரும் பல வலி முறைகளை பின்பற்றுவார்கள். ஆனால் ஆரோக்கியமான இயற்கை முறையில் எவ்வாறு தாடியை வளர செய்யலாம் என இப்போது பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்
உங்களுடைய மீசை மற்றும் தாடி வளர தேங்காய் எண்ணெய் நல்ல ஒரு தீர்வாக அமைகிறது. தினசரி நீங்கள் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணையை முகத்திற்கும் தேய்த்து வந்தால் மயிர்கால்கள் ஊட்டம் பெற்று முடி வேகமாக வளரும்.
தினமும் காலை தேங்காய் எண்ணையை உங்களுடைய தாடி மற்றும் மீசையில் நன்றாக படும்படி தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு அதன் பிறகு முகத்தை அலசலாம்.
இரவில் தூங்க செல்லும் முன்னர் தேங்காய் எண்ணையை உங்களுடைய தாடி மற்றும் மீசையில் தேய்த்து 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். பிறகு ஒரு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு அதன் பிறகு மீண்டும் ஒரு 2 நிமிடங்கள் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். காலையில் முகத்தை கழுவ வேண்டும்.
ஆழ்ந்த தூக்கம் அவசியம்
தூக்கத்துக்கும் தாடிக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்கலாம். ஆனால் உடலில் டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்புக்கு தூக்கமும் அவசியம். உடல் உறுப்புக சீராக இயங்க மட்டுமல்ல ஹார்மோன் சுழற்சியிலும் பாதிப்பில்லாமல் இருக்க தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூக்கம் அவசியம். இவை குறையும் போது ஹார்மோன் உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதம் குறைகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த தூக்க நேரத்தை கடைபிடித்தால் தாடி வளர்ச்சியை கண்கூடாக பார்க்கலாம்.
வெங்காயச் சாறு
நல்ல முறையில் இருக்கின்ற சிறு வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதனை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும் அவற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு விட்டமின் இ மாத்திரை ஒன்றும் மற்றும் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும் இந்த செய்முறையை நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் வரை கடைப்பிடித்து வந்தால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் மீசை தாடி வளர ஆரம்பித்துவிடும்.
கருஞ்சீரகம் எண்ணெய்
மீசை வளர கருஞ்சீரகம் எண்ணெய் எப்பொழுதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, எனவே நீங்கள் இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் நீராவி பிடித்து விட்டு பின்பு காட்டன் துணியால் முகத்தை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
இந்த கருஞ்சீரகம் எண்ணெய் மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும் மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவேண்டும்.
இந்த செய்முறையை தினமும் கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளர ஆரம்பித்துவிடும்.
மீசை தாடி வேகமாக வளர தேவையான உணவு முறை
மீசை தாடி வேகமாக வளர்வதற்கு சில வகையான ஊட்டச் சத்துக்கள் அவசியம் தேவை நீங்கள் அது போல் இருக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்களுக்கு பயன் கிடைக்கும்.
இத கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
நன்றி...🙏🙏🙏
Comments
Post a Comment