கேரள பெண்கள் இவ்வளவு அழகா இருப்பதற்கு இதுதான் காரணம்...!!!
சர்வதேச அளவில் இந்திய பெண்கள் என்றாலே ஒருவித மரியாதை கிடைக்கும்.அதற்கு காரணம் கலாச்சாரத்திலும் சரி,அழகிலும் சரி இந்திய பெண்களே சிறந்தவர்கள் என பலரும் ஏற்று கொண்டுள்ளனர்.இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் குறிப்பாக கேரள பெண்கள் தனித்துவமாக தெரிகிறார்கள்.பெண்களே பொறமை கொள்ளும் அளவில் அழகில் மிஞ்சியவர்களாக கேரள பெண்கள் திகழ்கிறார்கள்.அழகு மட்டுமல்லாமல் குணத்திலும் கேரள பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள பெண்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் அழகாக இருப்பதற்கு காரணமாக அவர்கள் வசிக்கும் இடமே காரணமாக கூறப்படுகிறது.அடுத்ததாக அவர்கள் பெரும்பாலும் இயற்கையோடு இணைந்து வாழ்வதுடன்,அதிகமாக இயற்கை பொருட்களை பயன்படுத்துவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இதுமட்டுமில்லாமல் மேலும் சில காரணங்களும் கூறப்படுகிறது.அது அவர்களின் அழகு பராமரிப்பு முறைகள் தான்.
கேரள பெண்களின் அழகின் ரகசியம்
இயற்கை சந்தனம்
பூமியில் இருந்து கிடைக்கப்படும் ஒரு வகை களிமண் தான் முல்தானி மட்டி. இதுவும் பெரும்பாலான கேரளத்து மக்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருள் தான்.
இதை இயற்கை சந்தனத்துடன் சேர்த்து பயன்படுத்துவார்களாம். இவை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நச்சு பொருட்கள் போன்றவற்றை தடை செய்து விடும்.
கேரளா உணவு
கேரளத்தில் உள்ளோர் தனி வகையான அழகை ஒருவதற்கு அவர்களின் உணவு முறையும் மிக முக்கிய காரணமாக உள்ளது.
கேரளா அரிசியில் அதிக மூலிகை தன்மை உள்ளது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான உடல் அமைப்புடன், நோய்கள் இல்லாமலும் இவர்கள் இருப்பார்களாம்.
குளிர்ந்த பால்
முகம் பார்க்க எப்போதுமே செழிப்பாக இருக்கவும், ஒரு வித வெண்மையை தருவதற்கும் குளிர்ந்த பால் உதவுகிறதாம். இவை முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அழகான முகத்தை பெற்று தருமாம்.
ஆமணக்கு எண்ணெய்
சருமமும், தோலும் எப்போதுமே ஈர்ப்பதுடன் இருக்க ஆமணக்கு எண்ணெய்யை பல கேரளத்து பெண்கள் பயன்படுத்துவர்களாம். இதில் உள்ள வைட்டமின்கள் நேரடியாகவே செல்களை புத்துணர்வூட்டி சிறப்பான அழகை தருகிறதாம்.
3 கலவை
பெரும்பாலான கேரளத்து பெண்கள் இந்த முறையை பயன்படுத்தி தான் முக அழகை எளிதாக பெறுகின்றனர். இது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி, மென்மையான முகத்தை பெற உதவும். இதற்கு தேவையானவை...
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
கோதுமை மாவு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் கோதுமை மாவை மஞ்சளுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாகும். இதுவும் கேரளத்து பெண்கள் கடைபிடிக்கும் சில விஷயங்களில் மிக முக்கியமான ஒன்றாம்.
மிக மிக முக்கியமானது!
கேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்க கூடிய அழகை பெறுவதற்கு இந்த ஒரே ஒரு பொருள் தான் மிக முக்கிய காரணம். அது தான் தேங்காய் எண்ணெய்.
இவர்கள் முகம், தலை, கை, கால், பாதம் முதலிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய்யை தடவி கொண்டு குளிப்பார்களாம். இது தான் அவர்களின் ஈடு இணையற்ற அழகிற்கு முதன்மையான காரணம்.
இத கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
நன்றி....🙏🙏🙏
My Youtube Channel Link....👇👇👇
https://youtube.com/c/Beautytips67
Comments
Post a Comment