முகம் தங்கம் போல் ஜொலிக்க இதோ தக்காளி ஃபேஸ் பேக்...!!!

இந்த பதிவில் வீட்டில் இருக்கக்கூடிய தக்காளியை வைத்து முக அழகை எப்படி மேம்படுத்தலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. பெண்கள் என்றாலே சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் தக்காளியை மட்டும் பயன்படுத்தி முக அழகை எப்படி அதிகரிக்கலாம் என்பதன் முழு விவரத்தை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க....





டிப்ஸ் 2


ஒரு பௌலில் சிறிது தக்காளிச் சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சந்தனப்பவுடர் போட்டு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.


டிப்ஸ் 2

வேக வைத்த தக்காளியோடு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு முகத்தில் தடவி, காய்ந்ததும் அதனை தண்ணீரால் கழுவி வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்




டிப்ஸ் 3

எண்ணெய் பாங்கான சருமம் உள்ளவர்களுக்கு,அடிக்கடி முகப்பரு உருவாக வாய்ப்புகள் அதிகம்.இதைத் தடுக்க தக்காளிச் சாற்றுடன்,சிறிதளவு வெள்ளரிச் சாற்றை கலந்து,அதனை மாஸ்க் போல பூசி வந்தால்,முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை குறையும்.


டிப்ஸ் 4

தக்காளி சாற்றை சிறிதளவு மலைத் தேனுடன் கலந்து கொள்ள வேண்டும்.இந்த கவலை கெட்டியாகும் வரை கலந்து கொண்டே இருக்க வேண்டும்.பின்னர் இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து,பின்னர் கழுவ வேண்டும்.இந்த கலவையை தொடர்ந்து முகத்தில் பூசி வர,முகப்பொலிவு ஏற்படும்.



டிப்ஸ் 5

பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.



இத கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க


நன்றி....🙏🙏🙏🙏



My youtube channel link...👇👇👇👇

Comments