ஒரே நாளில் பெண்கள் முகம் வெள்ளை ஆக..?

 ஒரே நாளில் பெண்கள் முகம் வெள்ளை ஆக..?


தங்களது முக அழகை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் மனிதர்களுக்கு உண்டான இயல்புதான். அதிலும் பெண்கள் இதில் அதிக கவனம் கொண்டவர்கள். மிக விலை உயர்ந்த கிரீம்கள் (Creams), ஃபேஸ் வாஷ் (facewash) போன்றவற்றை பயன்படுத்தி அதில் தோல்வி கண்டவர்கள் அதிகம்.



பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. மேலும் பிறவியிலேயே எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.


அந்தவகையில் முகம் பளபளன்னு ஜொலிக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அற்புத பொடி ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்


டிப்ஸ் 1

முல்தானி மெட்டி பவுடருடன் தயிர், சிறிது பன்னீர் கலந்து ஃபேஸ்பேக் மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் டால் அடிப்பது உறுதி.




டிப்ஸ் 2

சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.



டிப்ஸ் 3

கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.





டிப்ஸ் 4

வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றின் கலவையை முகத்தில் பூசிக்கொண்டால், பளிச்சென இருக்கும். 4 பாதாம்பருப்பு அரைத்த விழுதுடன், தேன் மற்றும் பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து பூசுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இது, முகத்துக்கு புரோட்டின் தன்மையை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்



டிப்ஸ் 5

வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசுங்கள். சற்று நேரம் ஊறவிட்டுக் கழுவிவிடுங்கள். சருமம் வறட்சி தன்மை நீங்கி மிருதுவாகும்.


இத கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க


                              நன்றி....🙏🙏🙏





















Comments