தாங்க முடியாத பல் வலி உடனே குணமாக வீட்டு வைத்தியம்...!!!

நம்ம வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது சந்திக்கும் ஓர் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் பல் வலி. ஒருவருக்கு பல் வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் அல்லது ஈறுகளில் தொற்றுக்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அப்பகுதியில் வீக்கம் மற்றும் ஈறுகளில் கிருமிகள் நிறைந்த திரவம் நிரம்பியிருக்கும். இந்நிலையில் கடுமையான மற்றும் கூர்மையான பல் வலியால் அவஸ்தைப்படக்கூடும்.




ஒருவரது வாய் சுகாதாரம் மோசமாக இருந்தால், அவர்கள் பல்வேறு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள். மேலும் சிலர் தங்களது வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சரிசெய்யாமல் விட்டுவிடுவதால், நிலைமை மோசமாகி, தாங்க முடியாத பல் வலியால் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் பல் வலியானது இரவு நேரத்தில் கடுமையானதாக இருக்கும். இந்நிலையில் நடு ராத்திரியில் பல் மருத்துவமனைக்கு செல்ல முடியாது.



இம்மாதிரியான சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பல் வலிக்கு நிவாரணம் காணலாம். உங்களுக்கு பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.


கொய்யா இலை



கொய்யா இலை கிடைத்தால் அதை மென்று அதன் சாறை பல்லில் படும்படி அப்படியே வைத்திருந்தாலும் குறையும் அல்லது கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து உப்பு கலந்து கொப்பளித்தாலும் குறையும்


எலுமிச்சை சாறு



சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து பற்களில் படும்படி கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.


வெங்காயம்


வெங்காயத்தின் சாறு கிருமிகளை அழிக்கும் என்பதால் வெங்காயத்தை அப்படியே மென்று துப்பிவிடுங்கள்.


இஞ்சி 


இஞ்சி சாறை கொப்பளித்து துப்பினாலும் குணமாகும்.


கிராம்பு


பல் வலி இருக்கும் இடத்தில் கிராம்பை வைத்து அப்படியே கடித்துக்கொண்டிருக்க பல் வலி குறையும்.


இத கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க


நன்றி...🙏🙏🙏







Comments